மணிமுத்தாறில் திமுக விருப்ப மனு வழங்கல்

அம்பை, நவ. 19:  மணிமுத்தாறில் நகர திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் பரணி சேகர் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பேச்சி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மாஞ்சோலை மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைசெயலர் கோமுராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் பிரசாரம் இன்றி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருமித்த கருத்தோடு வீடு, வீடாக சென்று மக்களிடம் கடந்த கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட மலை பிரதேசம் உள்ளிட்ட 15 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் துணை செயலர் பாலச்சந்தர், மாடசாமி, முருகன், ஜெயராமன், வேல்ச்சாமி, சுடலைமுத்து, அந்தோணிராஜ், காந்தி, சந்தனமாரி, சட்டநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அம்பை ஒன்றிய இளைஞரணி செயலர் முத்துகணேஷ் நன்றி கூறினார்.

Related Stories:

>