தேசிய நூலக வார விழா போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

வி.கே.புரம், நவ. 19:  பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 52வது தேசிய நூலக         வார விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.52வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு வி.கே.புரம் அரசு கிளை நூலகமும் பொதிகை வாசகர் வட்டம் சார்பில் வி.கே.புரம் பிஎல்டபிள்யுஏ பள்ளியில் வைத்து மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை மற்றும் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வி.கே.புரம் சுற்று வட்டாரத்திலுள் 15 பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா திருவள்ளுவர் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பொதிகை வாசகர் வட்ட தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் வயலட் முன்னிலை வகித்தார். நூலகர் குமார் வரவேற்றார். நூலக உதவியாளர் கைலாசம் நூலக அறிக்கை வாசித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்தாண்டு நல்நூலகர் விருதினை பெற்ற முக்கூடல் கிளை நூலகர் முத்துராமலிங்கத்தை பாராட்டி கேடயம் வழங்கப் பட்டது.விழாவில் கல்லூரி முதல்வர் சுந்தரம், தமிழ்த்துறை தலைவர் சிவசங்கர், மாவட்ட நூலக கண்காணிப்பாளர் சங்கரன், பாளையங்கோட்டை மைய நூலக வாசகர் வட்ட   துணை தலைவர் கணபதி சுப்பிரமணியன், கௌரவ ஆலோசகர் வல்சகுமார்,   கௌரவ தலைவர் சக்திவேல், செயற்குழு உறுப்பினர் மைதீன்பிச்சை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட பொருளாளர் இளங்கோ நன்றி கூறினார்.

Related Stories:

>