×

புளியமரத்து ஊருணி கரை சீரமைப்பு

திருவில்லிபுத்தூர், நவ. 19: திருவில்லிபுத்தூர் அருகே புளியமரத்து ஊருணி உள்ளது. இந்த ஊருணிக்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் வந்து சேரும். சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஊருணி நிரம்பி வழிகிறது. இந்நிலையில் ஊருணியின் கரை உடையும் நிலையில் இருந்தது. தகவலறிந்து வந்த திருவில்லிபுத்தூர் தாசில்தார் கிருஷ்ணவேணி மற்றும் அதிகாரிகள் ஊருணியின் கரையை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஜேசிபி மூலம் ஊருணிக்கு வந்த தண்ணீரை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். அதிகாரிகளின் நடவடிக்கையால் புளியமரத்து ஊருணி கரை உடைவது தவிர்க்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Tags :
× RELATED சுற்றுச்சுவர், படிக்கட்டு அமைக்கக்கோரி குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம்