கடையம் அருகே ஆபத்தான நிலையில் மின் பெட்டி

கடையம், நவ. 19:  கடையம் அருகே ஆபத்தான முறையில் திறந்த நிலையில் கிடக்கும் மின் பெட்டியால் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.கடையம் யூனியனுக்குட்பட்ட திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகே மெயின்ரோட்டில் இரும்பு மின் கம்பம் அமைந்துள்ளது. இந்த மின்கம்பத்தில் சுவிட்ச் பாக்ஸ் மிகவும் தாழ்வான உயரத்தில் சிறு குழந்தைகள் தொடக்கூடிய நிலையில் உள்ளது. இதன் அருகிலேயே பள்ளி இயங்கி வருகிறது. தினமும் பள்ளி முடிந்ததும் மாணவ மாணவிகள் இந்த மின் கம்பம் அருகில் நின்று ஆட்டோவிலும் நடந்தும் செல்கிறார்கள். சுவிட்ச் பாக்சிலிருந்து வயர்களும் வெளியே தெரியும்படி தொங்கிக் கொண்டிருக்கிறது.

இதன் அருகேயுள்ள பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தும் பொதுமக்களும் திறந்து கிடக்கும் இந்த சுவிட்ச் பாக்சால் அச்சத்தில் உள்ளனர். இதனால் இப்பகுதியில் எப்போதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.தற்போது மழைக்கால் என்பதால் ஈரப்பதம் மூலம் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இந்த மின்கம்பம் இரும்பு என்பதால் எளிதில் மின்சாரத்தை கடத்தும். எனவே அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு திறந்த நிலையில் உள்ள சுவிட்ச் பெட்டியை சீரமைத்து அதனை சுற்றி வேலி போட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>