வேன் மோதி தொழிலாளி பலி

பாவூர்சத்திரம், நவ.19: பாவூர்சத்திரம் ரயில்வே ரோட்டை சேர்ந்தவர் அன்பரசன் (54). இவர் நேற்று இரவு நெல்லை-தென்காசி ரோட்டில் சைக்கிளில் வந்தபோது பின்னால் வந்த பள்ளி வேன், இவர் மோதியது. இதில் படுகாயமடைந்த அன்பரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து வந்து அன்பரசன் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேனை ஓட்டி வந்த சுந்தரபாண்டி புரத்தைச் சேர்ந்த டிரைவர் இசக்கி (70) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பலியான அன்பரசனின் கண்களை தானம் செய்ய உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>