குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கால் காலையில் குளிக்க தடை

தென்காசி, நவ. 19:  குற்றாலத்தில் நேற்று முன்தினம் இரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக நேற்று அதிகாலையிலும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயினருவியில் பாதுகாப்பு கருதி மூன்றாவது நாளாக நேற்று காலையிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மதியத்துக்கு பின்னர் தடை விலக்கப்பட்டது.குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அதிகாலை வேளைகளில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது இதனால் கடந்த மூன்று தினங்களாக மதியம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பதும் மதியத்திற்கு பிறகு வெள்ளப்பெருக்கு குறைவதை அடுத்து மீண்டும் குளிக்க அனுமதிப்பதுமாக உள்ளது.

Advertising
Advertising

நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்ததால் நேற்று அதிகாலை வேளைகளில் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் கார்த்திகை மாதத்தில் திங்கள் கிழமைகளில் விரதம் மேற்கொண்டு சோமவார பூஜை நடத்தும் பெண்களும் மெயின் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் பழைய குற்றால அருவி மற்றும் புலியருவி நோக்கி படையெடுத்தனர். மதியத்திற்கு பிறகு தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

Related Stories: