×

செல்போன் திருடிய 2 பேர் கைது

சாத்தூர், நவ. 19: சாத்தூரில் இருந்து கோவில்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடையில், தூத்துக்குடி மாவட்டம் உருளைக்குடி கிராமத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (23) மற்றும் அவரது நண்பர் தங்களது டூவீலரை நிறுத்திவிட்டு டீ குடித்தனர். அப்போது டூவீலர் டேங்க் கவரில் இருந்த விலை உயர்ந்த செல்போனை சாத்தூர் சின்னஒடைபட்டியைச் சேர்ந்த கணேசமூர்த்தி (26), மந்திரமூர்த்தி (34) திருடிவிட்டு ஓடியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மடக்கிப் பிடித்து சாத்தூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அலெக்ஸ்பாண்டி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED சென்னை பூவிருந்தமல்லி கிளை சிறையில்...