குண்டும் குழியுமாக மாறிய ஆலங்குளம் சாலை

ஆலங்குளம்,நவ.19: ஆலங்குளத்தில் குண்டும் குழியுமாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை (20ம் தேதி) சாலை மறியல் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. நெல்லை - தென்காசி சாலையில் ஆலங்குளம் நகருக்குள் சாலையில் ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளம்  ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த இடத்தில் மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கிக்கிடப்பதால் சாலை முற்றிலும் சேறும் சகதியுமாக மாறி பள்ளம் இருப்பது தெரியாத நிலை உள்ளது. இதனால் பைக், கார் மற்றும் கனரக ஓட்டும்  வாகன ஓட்டிகள் இதில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகின்றனர். நாள்தோறும் இந்த பள்ளத்தில் குறைந்தது இரண்டு வாகனமாகவது விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.  எனினும் மோசமான நிலையில் உள்ள சாலையின் பள்ளத்தை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து முன்னாள் எம்.பி ராமசுப்பு தலைமையில் வரும் 20ம் தேதி சாலை மறியல் நடைபெறுவதாக ஆலங்குளம் நகரில் சுவரொட்டி ஒட்டப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: