×

அலங்காநல்லூரில் குரு பூஜை விழா

அலங்காநல்லூர், நவ. 19: அலங்காநல்லூரில் சந்ததம் பால் சுவாமிகள் மட ஆலயத்தில் குரு பூஜை விழா நடந்தது. இதையொட்டி லிங்கத்திற்கு மல்லிகை, முல்லை, ரோஜா, சம்பங்கி, அரளி உள்பட 9 வகையாக மலர்களால் அர்ச்சனைகள் நடந்தன. பின்னர் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி கொண்டல் சுவாமி மற்றும் வாரிசுதாரர்கள் செய்திருந்தனர்.

Tags : Guru Pooja Festival ,Alanganallur ,
× RELATED அலாங்கநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை