×

பழநியில் வஉசி நினைவுநாள் அனுசரிப்பு

பழநி, நவ.19: பழநியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வஉசி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. பழநி பஸ்நிலையம் அருகில் தமிழக வேளாளர் பேரவையின் சார்பில் வஉசி நினைவுநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. பேரவையின் கௌரவ தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார் தலைமை வகித்தார். சங்க நிர்லவாகிகள் ராஜாமணி, சண்முகநாதன், மதனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வஉசியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் பழநியில் வஉசி தலைமையகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் கவுன்சிலர் சுந்தர் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் இந்திரா திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். பாண்டிய வேளாளர் சங்க தலைவர் முருகன், நிர்வாகிகள் நித்தியானந்தம், பெருமாள், பேச்சிமுத்து, போஸ்ராஜன், குகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வஉசியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags : Vuasi Memorial Day ,Palani ,
× RELATED பாஜ தலைவர் முருகன் பழநியில் கைது