×

படியுங்கள் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில்

ஒட்டன்சத்திரம், நவ.19: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த இடத்திலேயே எரிப்பதால் பொதுமக்கள் மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 1 முதல் 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் வாங்கி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலேயே குப்பையை கொட்டி தீ வைக்கின்றனர். பழநி சாலை, வேடசந்தூர் சாலை, சின்னக்குளம், திண்டுக்கல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் உருவாகி துர்நாற்றத்துடன், பொதுமக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் புகை மூட்டத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து சுரேஷ்குமார் என்பவர் கூறியதாவது, ‘அதிகாலை நேரங்களில் குப்பைகளை மாணவர்கள் பள்ளி செல்லும் நேரங்களில் எரிப்பதால் பள்ளி மாணவர்கள் கண் எரிச்சல் மற்றும் இருமல் போன்றவற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இது சம்மந்தமாக நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் கூறினால் குப்பைகள் கொட்ட எங்களுக்கு இடம் கிடைப்பதில்லை. ஆதலால் அந்தந்த பகுதிகளிலேயே குப்பைகளை எரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கூறுகிறார்கள். எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குப்பைகள் கொட்டுவதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

Tags : areas ,
× RELATED பிடிஓவின் வாகனத்தை எட்டி உதைத்த...