×

ஞாயிறு தோறும் நத்தம் கைலாசநாதர் கோயிலில் மழை வேண்டி 108 சங்காபிஷேகம்

நத்தம், நவ. 19: நத்தம் கைலாசநாதர் கோயிலில் மழை பெய்ய வேண்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழா நடந்தது. இதையொட்டி மூலவர் கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Nattam Kailasanathar Temple ,
× RELATED சென்னை பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை