×

வத்தலக்குண்டு அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமிபூஜை

வத்தலக்குண்டு, நவ. 19: வத்தலக்குண்டு அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் கோம்பைப்பட்டி ஊராட்சி கீழக்கோவில்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை நிதியில் இருந்து ரூ.8.70 லட்சம் மதிப்பில்  அங்கன்வாடி மையம் கட்ட பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு வத்தலக்குண்டு அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயச்சந்திரன், வேதா, நிலக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாள்ர் யாகப்பன், முன்னாள் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலையில் பூமிபூஜை நடந்தது. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழிசேகர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் அன்னக்களஞ்சியம், ஜான், சுதாகர், சதீஸ்குமார், மகாராஜன், பாலகிருஷ்ணன், முத்துக்குமார், கருப்பபிள்ளை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags : Earthquake ,building ,Anganwadi ,Wattalakundu ,
× RELATED நங்கப்பட்டி ஊராட்சியில் பள்ளி...