×

வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம்

ஒட்டன்சத்திரம், நவ.19:  ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோபாலபுரம் மற்றும் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு மக்காச்சோளத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மக்காச்சோள மேக்சிம் குறித்து மாணவிகள் விவசாயிகளுக்கு விடுவாக எடுத்துக் கூறினர். இது மக்காச்சோளத்தின் மணி பிடிக்கும் திறனையும், வறட்சியை தாங்கும் திறனையும் அதிகரித்து விளைச்சலை 20 சதம் வரை கூட்டும். இதனைப் பயன்படுத்தும் முறை குறித்தும் மதுரை வேளாண்மைக் கல்லூரி  மாணவிகள் தர்ஷினி பிரியா, திவ்யா, இலக்கியா, மன்மிதா, கீதப்ரியா, கரி, கோபிகா, கௌரிகார்த்திகா ஆகியோர் கலந்துகொண்டு  விளக்கம் அளித்தனர்.

Tags :
× RELATED சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்