×

கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தர்ணா

திருப்பூர், நவ.19: திருப்பூர், மாவட்டம் மங்கலம் பூமலூர் பகுதியைச் சேர்ந்தவர் வனிதாமணி (35) இவர், தனது இரண்டு குழந்தைகளுடன் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக வாயிலில் தனது இரண்டு குழந்தைகளுடனும் கதறி அழுதபடி அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதானம் செய்து அவரிடமிருந்த  மனுவை கலெக்டரிடம் கொடுக்க பரிந்துரை செய்தனர். இதுகுறித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வனிதாமணி கூறுகையில், ‘‘கடந்த ஜூன் 30ம் தேதியன்று பூமலூரில் உள்ள எங்கள் வீட்டின் முன்னறையில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக எனது கணவர் ரங்கசாமி(40) மின்சாரம் தாக்கி இறந்தார்.
இந்நிலையில் எனது கணவரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் என்னுடன் வசித்து வருகிறார். மேலும், எனது 2 குழந்தைகளும் என்னுடன் வசித்து வருகின்றனர். நான் கூலி வேலைக்கு சென்று மூவரையும் காப்பாற்றி வருகிறேன். என் நிலையில் எனக்கு அரசு சார்பில் கிடைக்கும் உதவி தொகை பெறுவதற்காக பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்து எந்த பயனும் இல்லை. என் கணவர் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான முதல் தகவல் அறிக்கை தரும்படி மங்கலம் போலீஸ் நிலையத்தில்  விண்ணப்பித்தும் போலீசார் தர மறுக்கின்றனர். இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய அரசு உதவித்தொகை கிடைக்காமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது. என் குழந்தைகள் மற்றும் வயதான மாமியாரை காப்பாற்றுவதற்காக போதிய வருமானம் இன்றி தவித்து வரும் தனக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுத்துத் தர வேண்டும் எனவும் கண்ணீர் மல்க அவர் கதறினார்.

Tags : Mother Darna ,children ,Collector ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...