×

மத்திய சேமிப்பு கிடங்கில் தானியங்கள் குறைகிறது

கோவை, நவ.19: தமிழகத்தில் மத்திய அரசின் உணவு துறையின் கட்டுபாட்டில் உள்ள மத்திய சேமிப்பு குடோன் (சென்ட்ரல் வேர் ஹவுஸ்) தமிழகத்தில் 29 இடங்களில் குடோன் அமைத்துள்ளது. இந்த குடோன்களில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டு வருகிறது. தானியங்களை சேமிக்க வட்டார அளவில் குடோன்கள் தேவைப்படுகிறது. கடந்த 10 ஆண்டாக மாநில அளவில் கூடுதல் குடோன்கள் அமைக்கப்படவில்லை. மத்திய அரசின் உணவு தானியங்களை சேமிக்க வசதியாக கூடுதல் குடோன்கள் அமைக்கும் திட்டம் நிலுவையில் இருக்கிறது. கோவை புதுசித்தாபுதூரில் 7500 டன் உணவு தானியம் சேமிக்கும் வகையிலான குடோனில் 5000 டன் உணவு தானியம் இருக்கிறது. சிங்காநல்லூர் கண்டெய்னர் டெப்போ அருகேயுள்ள குடோனில் 18000 டன் உணவு தானியம் இருக்கிறது. திறந்த வெளியில், 2,000 டன் தானியம் கையாளப்பட்டு வருகிறது. ஈரோட்டில் 10,000 டன் உணவு தானியம் கையாளப்படுகிறது.

மாநில அளவில் அம்பத்தூர், மதுரை இரண்டாவது குடோனில் மட்டுமே 100 சதவீதத்திற்கும் அதிகமான உணவு தானியங்கள் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் உள்ள குடோன்களில், 35 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலான உணவு தானியங்கள் மட்டுமே கையாளப்படுகிறது. பாதுகாப்பு வசதியில்லாத நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து உணவு தானியங்களை மத்திய சேமிப்பு குடோனிற்கு வரவழைப்பது கணிசமாக குறைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மத்திய சேமிப்பு குடோன்கள் மூலமாக இருப்பு வைக்கப்படும் உணவு தானியங்கள் ரேஷன் கடை, மத்திய மாநில அரசின் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சேமிப்பு கிடங்குகளை மேம்படுத்தாமல் விட்டதால், உணவு தானியங்களை வாணிப கழகங்களில் கட்டுபாட்டில் விடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வாணிப கழகத்தின் வசம் போதுமான சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் நீண்ட தூரம் சரக்கு லாரிகளில் உணவுதானியங்களை சப்ளை செய்யவேண்டியுள்ளது. மத்திய சேமிப்பு குடோன்களை மேம்படுத்த மத்திய உணவுத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : storage warehouse ,
× RELATED பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள...