×

இரண்டாம் நிலை போலீசாருக்கான உடல்திறன் தேர்வில் 972 பேர் பங்கேற்பு

கோவை, நவ.19: கோவையில் நடந்த இரண்டாம் நிலை காவலருக்கான உடல்திறன் தேர்வில் 972 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு படை வீரர் பணிகளுக்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கியது. ஆண்களுக்கான உடல்திறன் தேர்வில் பங்கேற்க 972 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

முதலில் கயிறு ஏறும் போட்டி நடந்தது. இதில் தேர்வு பெற்றவர்கள் நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் 100 மீ அல்லது 400 மீ ஓட்டப்பந்தயத்துக்கு அனுப்பப்பட்டனர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், டி.ஐ.ஜி கார்த்திகேயன், எஸ்.பி சுஜித்குமார் ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடந்தது. பெண்களுக்கான உடல்திறன் தேர்வு இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்ள 348 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடல்திறன் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு வரும் 20ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

Tags : Participants ,Physical Examination for Secondary Police ,
× RELATED வயது முதிர்ந்தவர்கள்,...