நந்தா இயற்கை மருத்துவமனை இலவச மருத்துவ முகாம்

ஈரோடு, நவ.19: நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை, புனே தேசிய இயற்கை மருத்துமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இச்சிறப்பு முகாமிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரீவ்ஸ் ஜன்டின் தாஸ் வரவேற்றார்.

முகாமை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர். இம்முகாமில் பெருந்துறை சுற்று பகுதியை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு இலவச உடல் எடை, ரத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை அளவினை சரிபார்த்து பயன் பெற்றனர்.

Related Stories:

>