மலைப்பகுதியில் கல்குவாரி நடத்த ஏலம் விட எதிர்ப்பு

ஈரோடு, நவ.  19:   ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

 அந்த மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் புதியதாக 4 கல்குவாரிகள் அமைக்க ஏலம் விடப்படுகிறது. மத்திய அரசு விதிமுறைகளின்படி மலையடிவாரத்தில் 10 கி.மீட்டர் தொலைவிற்குள் கல்குவாரி அமைக்க அனுமதி இல்லை. ஆனால் மாநில அரசு 3 கி.மீட்டர் தொலைவில் 4 கல்குவாரிகள் அமைக்க ஏலம் விட்டுள்ளது. இதனால் மலைகளின் பிடிப்பு தன்மை பாதிக்கப்படுவதுடன் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. வனப்பகுதியில் கல்குவாரி அமையும்போது வன பாதுகாப்பு கேள்விக்குறியாகும். வெடி வைக்கும்போது வனவிலங்குகள் குடியிருப்புகள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. மக்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இதை கண்டுகொள்ளாமல், தொடர்ந்து ஏலம் விட நடவடிக்கை எடுத்து வருகிறது. இயற்கை வளத்தை பாதுகாக்க மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் கல்குவாரி அமைக்க ஏலத்தை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Advertising
Advertising

Related Stories: