×

திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்களை 28ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

ராணிப்பேட்டை, நவ.19: வரும் 28ம் தேதி வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்கள் தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதையடுத்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையில் விழா நடைபெறும் இடங்களை கலெக்டர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர் புதிய மாவட்டங்களை முறைப்படி துவக்கி வைக்கும் விழா வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சேலத்தில் இருந்து காலையில் புறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் மதியம் 12 மணியளவில் திருப்பத்தூர் வருகிறார்.திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் திருப்பத்தூர் புதிய மாவட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்து பேசுகிறார். இதில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.தொடர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் ராணிப்பேட்டையில் நடைபெறும் விழாவில் ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இதற்காக ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிலையத்தில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், விழா நடைபெறும் இடத்தை ராணிப்ேபட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சப்-கலெக்டர் இளம்பகவத், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டுமானம்) திரிபுரசுந்தரி, உதவி செயற்பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர் (மின்சாரம்) ஹரிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.அதேபோல் திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி மைதானத்தில் விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் சிவன் அருள் நேற்று பார்வையிட்டார்.

Tags : festival ,chief minister ,Ranipet ,districts ,Tirupattur ,
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு...