திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதியில் ஒரே நாளில் ஷட்டர்களை உடைத்து 7 டாஸ்மாக் கடைகளில் மது, பணம் திருட்டு காரில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை

திருப்பத்தூர், நவ. 19: திருப்பத்தூர், ஜோலார்பேட்டை அருகே 6 டாஸ்மாக் கடைகளில் ஷட்டர்களை உடைத்து பணம் மற்றும் மதுபானங்களை காரில் வந்த மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கோடி பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் தினமும் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்த பின்னர் மேற்பார்வையாளர் குணசந்திரன்(45), 3 கடைகளையும் பூட்டிவிட்டு சென்றார். நேற்று அதிகாலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டனர்.இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் மற்றும் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ேபாலீசார் மற்றும் குணசந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.போலீஸ் விசாரணையில், 3 கடைகளின் ஷட்டர்களையும் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பணம் மற்றும் மதுபானங்களை திருடிச் ெசன்றது தெரிய வந்தது.

அதேபோல், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அதன் மேற்பார்வையாளர் சிவன் நேற்று முன்தினம் இரவு பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை பார்த்தபோது அந்த கடையின் ஷட்டரும் உடைக்கப்பட்டிருந்தது. கடையில் வைத்திருந்த ₹20 ஆயிரம் மற்றும் மதுபானங்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.மேலும், தாமலேரிமுத்தூர் கூட்ரோடு, புதுப்பேட்டை ஆகிய கிராமங்கிளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளிலும் ஷட்டர் உடைக்கப்பட்டு பணம், மதுபானங்கள் திருடப்பட்டுள்ளது. அதேபேல், நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர் அடுத்த குனிச்சி டாஸ்மாக் கடையின் ஷட்டர் உடைத்து 70 பெட்டி மதுபானங்கள் மற்றும் பணத்தை காரில் வந்த மர்ம ஆசாமிகள் திருடியுள்ளனர்.அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் டார்ச் லைட் அடித்து பார்த்தனர். உடனே உஷாரான கொள்ளை கும்பல் மதுபாட்டில்களை அங்கேயே விட்டு விட்டு காரில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டனர்.திருட்டு நடந்த இந்த 7 கடைகளிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா, ேஜாலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: