×

தேரோடும் மாட வீதியை சீரமைக்க வேண்டும் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு

திருவண்ணாமலை, நவ.19: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேரோட்ட முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் 6ம் நாளன்று வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. 7ம் நாள் விழாவில், பஞ்சரதங்கள் பவனி நடைபெறும். விழாவின் நிறைவாக 10ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறும்.இந்நிலையில், அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறும் மகா தேரோட்ட ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்ணாமலையார் கோயிலில் நேற்று இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் நடந்தது. அதில், தேரோட்டத்தின் போது தேர் அச்சு இயக்கம் மற்றும் கட்டை போடும் பணியில் ஈடுபடும் சேவைப்பணியில் ஈடுபடும் சமுகத்தினர் கலந்து கொண்டனர்.தேர் திருவிழாவின் போது, விநாயகர் தேர், முருகர் தேர், மகா ரதம், அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய பஞ்சரதங்களும் அடுத்தடுத்து மாட வீதியில் வலம் வருவதால், தேரோடும் வீதியை முறையாக புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், கடலைக் கடை சந்திப்பில் தேர் திருப்ப வசதியாக, அசலியம்மன் கோயில் தெரு, மார்க்கெட் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றி, சீரமைக்க வேண்டும் என்றனர். அதேபோல், பே கோபுர வீதி, பெரிய தெரு மேடு ஆகிய இடங்களில் சாலையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.பாரம்பரியமாக தேரோட்ட திருப்பணியில் ஈடுபடும் போயர் சமுதாயத்தினருக்கு, கோயில் சார்பில் வழங்கப்படும் அனுமதி அடையாள அட்டை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தேரோட்டத்தின் ேபாது, தங்களை கெடுபிடியுடன் போலீஸ் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.கூட்டத்தில், போர்மன்னன் ராஜா, ராேஜஷ் திருநாவுகரசு, அரசப்பன், சுரேஷ், அருண், கவுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Advisory Council ,
× RELATED தேசிய இனங்களின் மொழிகளை சிறுமைப்படுத்துவதா? ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்