×

கொட்டகை அமைப்பதில் மோதல் 2 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை, நவ.19: மங்கலம் அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(46), விவசாயி. இவர் அதே  பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள காலி இடத்தை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த இடத்தில் கடந்த 7ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(25), என்பவர் கொட்டகை அமைத்தார். இதையறிந்த குப்பன், இவரது மனைவி அலமேலு, சிலம்பரசனிடம் எதற்காக நாங்கள் அனுபவித்து வரும் இடத்தில் கொட்டகை அமைக்கிறாய் என கேட்டுள்ளனர்.இதில், இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன், இவரது நண்பர் இளங்கோ இருவரும் சேர்ந்து தம்பதியரை சரமாரியாக தாக்கினர். இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயமடைந்த குப்பன், சிலம்பரசன் இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து குப்பன், சிலம்பரசன் தனித்தனியாக மங்கலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : conflict ,
× RELATED ராஜஸ்தானுடன் இன்று மோதல்: பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்சாப்?