×

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் வின்சென்ட் தெ பவுல் சபை கூட்டம்

ஆரல்வாய்மொழி, நவ.19: ஆரோக்கிய நகர், எட்டாமடை வட்டாரங்கள் இணைந்து புனித வின்சென்ட் - தெ - பவுல் சபை கூட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் நடைபெற்றது.  தேவசகாயம் மவுண்ட் பங்கு தந்தை ஸ்டீபன் தலைமை வகித்தார். இணை பங்கு தந்தை சிபு முன்னிலை வகித்தார். வட்டார அருட்பணி பேரவை துணை தலைவர் ஜேக்கப் மனோகரன் வரவேற்றார். சகாயராணி ஜெபம் செய்தார்.  ஆரோக்கிய நகர்,எட்டாமடை வட்டார வின்சென்ட் - தெ- பவுல் சபையின் செயலர் அறிக்கை வாசித்தார். பங்கு பேரவை துணை தலைவர் மிக்கேல் வாழ்த்துரை வழங்கினார். மத்திய பேரவை செய்திகளை மறைமாவட்ட செயலளர் மோரீஸ் வாசித்தார். கிறிஸ்மஸ் விழாவில் ஆதரவற்ற முதியோர்கள், ஏழை எளியவர்களுக்கு நலஉதவிகள் வழங்கி அவர்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பிரிட்டோ, மிக்கேல், சகாயம், அற்புதராஜ், ஆரோக்கியராஜ், தேவசகாய மைக்கேல் ராஜ், பொருளாளர் சேவியர் ராஜ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vincent The Bowl Congregational Meeting ,Oral Theology Mountain ,
× RELATED மழைக்காலத்தில் வீடுகளில் நல்ல...