×

நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், நவ.19: மத்திய மாநில அரசுகள் வன உரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு 10 கோடி குடும்பங்களின் நில வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மனித உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்துகின்ற களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்துடன் குமரி மாவட்ட வனம் மற்றும் பட்டா நிலங்களை இணைக்கும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள பட்டா நிலங்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட விவசாய தொழிலாளர் நல சங்கம் மற்றும் புலிகள் சரணாலய எதிர்ப்பு அனைத்து கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் ரவி தலைமை வகித்தார். பூமி பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு தலைவர் பத்மதாஸ் தொடங்கி வைத்தார். தெற்கு எழுத்தாளர் சங்க தலைவர் திருத்தமிழ் தேவனார், நில உரிமை கூட்டமைப்பு போஸ், நீர்ப்பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, தடிக்காரன்கோணம் ஊராட்சி திமுக கிளை செயலாளர் பிராங்கிளின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை