×

சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அய்யா வைகுண்டர் மகா பாதயாத்திரை

தென்தாமரைகுளம். நவ. 19:  ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் 1ம் தேதி அன்று சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு பதி வரை அய்யாவழி பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இந்த வருட அய்யா வைகுண்டர் மகா பாதயாத்திரை  சாமிதோப்பு முத்திரி கிணற்றில் பதம் அருந்தி வழிபட்டு  அன்புவனத்தில் சிறப்பு பணிவிடைகளுடன்  தொடங்கியது. பாதயாத்திரைக்கு அன்புவன நிறுவன தலைவர் பால பிரஜாபதி அடிகளார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வளவன், பேராசிரியர் தர்ம ரஜினி முன்னிலை வகித்தனர். கேரள நாடார் மகாஜன சங்க தலைவர் அகிமோகனன், முன்னாள் சாமிதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன், பொள்ளாச்சி செல்வராஜ், ரெத்தினமணி, கோபால கிருஷ்ணன், வக்கீல் பொன் செல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 முதல் நாள் இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் மண்டபத்தில் தங்கினர். வருகிற 22ம் தேதி திருவனந்தபுரம் சிங்கார தோப்பு பதியை பாதயாத்திரை குழு அடைகிறது. அங்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையுடன், தான தர்மங்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. தினமும் அய்யாவின் நிழல்தாங்கல்களில் தங்கி அங்கு கருத்தரங்கம்,  சமய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்யா வைகுண்டர் மகா பாதயாத்திரை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Tags : Ayya Vaikundar Maha Pilgrimage ,Trivandrum ,
× RELATED 10 நிமிடம் முன்னதாகவே புறப்படும்...