×

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

எட்டயபுரம், நவ. 19:எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனத்தில் பாஜ சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. பாஜ கிளை செயலாளர் சங்கரலிங்கம் மற்றும் தளவாய்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட பாஜ தகவல் தொழில்நுட்ப அணி துணை தலைவர் ஆத்திராஜ் நிலவேம்பு குடிநீரை வழங்கி முகாமினை துவக்கி வைத்தார். இளம்புவனத்தில் தெருத்தெருவாக சென்று அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கினர். மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நிலவேம்பு குடிநீரின் முக்கியத்துவம் பற்றியும் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் இளம்புவனம் பாஜ நிர்வாகிகள் சவுந்தர்யா, ராமர், ஹரிஹரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாகன ஓட்டுநர் அணி செயலாளர் காளிராஜ் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


Tags : Dengue Eradication Awareness Camp ,
× RELATED காய்ச்சல், வயிற்று போக்கு ஏற்பட்டால்...