கோவில்பட்டியில் ரோட்டரி கருத்தரங்கம்

கோவில்பட்டி, நவ. 19: கோவில்பட்டி சவுபாக்யா மகாலில், ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ‘‘சமுதாய சேவையில் மகிழ்வித்து மகிழ்’’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்க தலைவர்  ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி,  உதவி ஆளுநர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ்  வரவேற்றார். மாவட்ட பயிற்றுநர் விஜயகுமார் கருத்தரங்க நோக்கம் பற்றி உரையாற்றினார்.  மாவட்ட ஆளுநர் ஷேக் சலீம், மாவட்ட முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம்,  பேச்சாளர் கவிதா ஜவகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட செயலாளர்  சிதம்பரம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஆளுநர்கள் முருகதாஸ்,  ஜெசிந்தா தர்மா, இதயம் முத்து, யூனியன் கிளப் தலைவர் சீனிவாசன், கோவில்பட்டி  ரோட்டரி சங்க செயலாளர் முத்துமுருகன் உட்பட தூத்துக்குடி, நெல்லை,  கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில்  இருந்து 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி ரோட்டரி  சங்க தலைவர் பரமேஸ்வரன் நன்றி கூறினார். கருத்தரங்கில் குழந்தைகளை  பாதுகாப்பதே நமது கடமை. அதனால் குழந்தைகளை பாதுகாக்க அனைத்து வகையான  முயற்சிகளையும் ரோட்டரி சங்கம் எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: