×

பைக் விபத்தில் அனல்மின் நிலைய தொழிலாளி பலி

தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப் 2 பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் அருண்குமார் (23). இவர், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்பினார். தூத்துக்குடி ஆண்டாள் தெருவில் வரும்போது மழை பெய்ததால் பைக் அருண்குமார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த வடபாகம் போலீசார், உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

‘‘மழைநீரை வெளியேற்ற வேண்டும்''சின்னக்கண்ணுபுரம் பாரதிநகர் நற்பணி மன்றம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு: மீளவிட்டான் ரோடு பாரதிநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள சாலைகளில் தேங்கியுள்ள மழை தண்ணீரை வெளியேற்றிவிட்டு சாலையை உயர்த்தி அமைக்க கோரிக்கை வைத்து இருந்தோம். தற்போது அந்த பகுதியில் முதன்மை சாலையாக உள்ள மீளவிட்டான் சாலையில் இருந்து பிரியும் 3 சாலைகளின் முகப்பில் மட்டுமே மண் அடித்து அரைகுறைவாக சீர் செய்யப்பட்டு உள்ளது.பாரதி நகர் கிழக்கு பகுதியில் 2 உட்புற சாலைகளும், மேற்கு பகுதியில் 2 உட்புற சாலைகளும் மழைநீரால் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் முழுமையாக சீர்செய்து மழைநீரை வெளியேற்றி மோசமாக உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும். இதேபோல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநகர குழு சார்பில் அளிக்கப்பட்ட மனு: தபால் தந்தி காலனி மேற்கு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. தற்போது பெய்த மழையால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி மழை நீரை வெளியேற்றி சாலை அமைக்கப்படாத பகுதிகளில் தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும். ராஜகோபால் நகர் மற்றும் மகிழ்ச்சிபுரம் பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்ற கோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags : station worker ,bike accident ,
× RELATED (தி.மலை) மரத்தில் பைக் மோதி விவசாயி பலி