×

தனியார் ஊழியர் வீட்டை உடைத்து டிவி, பைக் கொள்ளை

ஆவடி, நவ.19: ஆவடி அருகே அண்ணனூர், சிவசக்தி நகர், ராமாயணம் தெருவை சேர்ந்தவர் சாய்ராம் (49). இவர், பாடியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், நேற்று முன்தினம் சாய்ராம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தாம்பரத்தில் உள்ள உறவினர்  திருமணத்திற்கு சென்றார். நேற்று காலை சாய்ராம் வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. இதுகுறித்து, அக்கம் பக்கத்தினர் அவருக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அவர் குடும்பத்துடன் விரைந்து வந்து பார்த்தார்.

அப்போது வீட்டில் இருந்த 42 அங்குலம் எல்.இ.டி டிவி, லேப்டாப் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மற்றும் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த  விலை உயர்ந்த பைக்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா மூலம் தேடுகின்றனர்.


Tags : bike robbery ,house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...