டைட்டன் நிறுவனம் சார்பில் பிரத்யேக கைக்கடிகார கலெக்சன் அறிமுகம்

சென்னை: டைட்டன் கைக்கடிகார நிறுவனம் “நம்ம தமிழ்நாடு கலெக்சன்” என்ற பெயரில் புதிய கைக்கடிகார தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரங்கள் தமிழக கலாச்சார செழுமையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இந்த தொகுப்பு, டைட்டன் நிறுவன தலைமை வடிவமைப்பு அதிகாரி ரேவதி காந்த் மற்றும் பிரபல நாட்டிய கலைஞரும், திரைப்பட நடிகையுமான ஷோபனா சந்திரகுமார் பிள்ளை ஆகியோரால், சென்னையில் வெளியிடப்பட்டது. கோயில் கட்டிடக் கலை, காஞ்சிபுரம் பட்டு புடவைகளின் கலை நுணுக்கம், தனித்துவம் வாய்ந்த தமிழ் எழுத்துகள் இந்த புதிய கைக்கடிகாரத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து ரேவதி காந்த் கூறுகையில், ‘‘இந்த கைக்கடிகார தொகுப்பு ஆண்கள்  மற்றும் பெண்களுக்கான 7 வெவ்வேறு கலை அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப  அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பானது Titan.co.in என்ற  இணையதளத்திலும், வோர்ல்டு ஆஃப் டைட்டன் விற்பனை  நிலையங்களிலும்,தமிழ்நாட்டில் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப் பூர்வ  டீலர்களிடமும் கிடைக்கும்,” என்றார்.

நிகழ்ச்சியில், டைட்டன் கைக்கடிகாரங்களின் சந்தைப்படுத்துதல் பிரிவுத் தலைவர் கன்வல்ப்ரீத் வாலியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>