போலீஸ்காரரிடம் செல்போன் பறிப்பு : பைக் ஆசாமிகளுக்கு வலை

புழல்:போலீஸ் காரரிடம் செல்போன் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின் றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூர் அடுத்த தண்டலம், மணிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (20). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த நிர்மல் (20). இருவரும் சென்னை ஆயுதப்படை காவல் பிரிவில் வேலை செய்கின்றனர். தற்போது புழல் சிறைச்சாலை பகுதியில் காவல் பணி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் நாராயணனும், நிர்மலும் மாதவரம் நோக்கி பைக்கில் சென்றனர்.
Advertising
Advertising

பைக்கை நிர்மல் ஓட்ட, பின்னால் நாராயணன் அமர்ந்து செல்போனில் பேசியபடி சென்றுள்ளார். மாதவரம் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் திடீரென நாராயணன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்தனர். இதனால் அவர் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனால் செல்போன் திருடர்கள் அங்கிருந்து தப்பினர். இதன்பிறகு காயமடைந்த நாராயணனை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நாராயணன் கொடுத்த புகாரின்படி, புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: