×

குன்னூர் அருகே நாய்களை பிடிக்க வந்த சிறுத்தையால் பரபரப்பு

குன்னூர், நவ. 14:  குன்னூர் அருகே ட்ரம்ளா எஸ்ட்டேட் பகுதி உள்ளது. இப்பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டம் மற்றும் காடுகள் நிறைந்துள்ளது. தண்ணீர் மற்றும் உணவு தேடி இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு காட்டு மாடு, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் இரவு நேரங்களில் வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள குடியிருப்பு  பகுதியில் பகல் நேரத்தில் நாய்களை பிடிக்க சிறுத்தை ஒன்று வீட்டின் அருகே வந்துள்ளது.
சாலையில் ஓடிவந்த சிறுத்தையின் சத்தத்தை கேட்டு நாய்கள் சத்தமிட்டன. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து கூச்சலிட்டதால் சிறுத்தை நாய்களை பிடிக்காமல் ஓடி சென்று விட்டது.

அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை வந்ததால், அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

Tags : Coonoor ,
× RELATED வி.கே.புரம் அருகே சிறுத்தை சிக்கியது