×

மலை ரயிலில் பயணிக்க குவியும் சுற்றுலா பயணிகள்

குன்னூர், நவ. 14:   குன்னூர்ஊட்டி இடையே இயங்கி வரும் மலை ரயிலில் பயணிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர்மேட்டுப்பாளையம் இடையே உள்ள மலை ரயில்  பாதையில் பாறைகள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்ததால், இரண்டு நாட்களுக்கு  குன்னூர்மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.  இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே அவர்கள் குன்னூர்-  ஊட்டி இடையே இயங்கும் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதனால் குன்னூர் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம்  அலைமோதுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு  நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். அவர்கள் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் ரயிலில் வெளிநாட்டு பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகையின்றி பூங்காக்கள் வெறிச்சோடியது