×

ஜிம்கானா கிளப் வசம் இருந்த 34.6 ஹெக்டர் நிலம் மீட்பு

ஊட்டி, நவ. 14:  ஊட்டியில்  உள்ள பழமை வாய்ந்த ஜிம்கானா கிளப் கைவசம் இருந்து 34.6  ஹெக்டர் நிலத்தை மீண்டும் வனத்துறை கையகப்படுத்தியது.   நீலகிரி  மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வனங்களாக உள்ளது. கடந்த 50 ஆண்டுக்கு  முன் இது போன்ற வனத்துறை நிலங்களை பல்வேறு அரசு துறைகள் மற்றும் தனியார்  அமைப்புகள் 50 ஆண்டுகள் மற்றும் 99 ஆண்டுகள் என குத்தகைக்கு  எடுத்துக் கொண்டனர். அதேசமயம், இதற்கு ெசார்ப்ப தொகை  செலுத்தி  வருகின்றனர். பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதற்கான வரியை முறையாக செலுத்துவதில்லை.இது ேபான்று குத்தகைக்கு இருக்கும் தனியார்  அமைப்புகளில் ஒன்றுதான் ஜிம்கானா கிளப். பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள  இந்த ஜிம்கானா கிளப் மிகவும் பழமையானது. கடந்த 1896ம் ஆண்டு  ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்டது. துவக்கத்தில் வேட்டையாடுபவர்கள் கூடும்  அமைப்பாக இருந்தது. பின்னர் கால்ப் கிளப்பாக மாற்றப்பட்டு, கால்ப்  விளையாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த கிளப் கட்டுப்பாட்டில் 78 ஹெக்டர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் பெரும்பாலான  பகுதிகளில் புல் மைதானங்கள் மற்றும் கால்ப் போட்டிகள் நடத்தப்படும்  பகுதிகளாக உள்ளது. மற்றொரு பகுதி அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டுள்ளது.  அதில், பல ஆயிரக்கணக்கான கற்பூர மரங்கள் உள்ளன. இப்பகுதியினை ஜிம்கானா  கிளப், கால்ப் விளையாட்டிற்காகவோ அல்லது வேறு காரியங்களுக்காகவோ  பயன்படுத்துவதில்லை. மேலும், குத்தகை பணமும் பல ஆண்டுகளாக அரசுக்கு  செலுத்தாமல் இருந்துள்ளது. தற்போது செலுத்த வேண்டிய குத்தகை தொகை ரூ.50 கோடியை தாண்டியுள்ளது. இதில் வருவாய்துறைக்கு ரூ.15 ேகாடி வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த கிளப்பின் கட்டுப்பாட்டில் உள்ள 34.6  ஹெக்டர் நிலத்தை கையகப்படுத்த வனத்துறையினர் முடிவுசெய்தனர். இதற்கான  சர்வே பணிகள் கடந்த இரு மாதங்களாக நடந்து வந்தது. நேற்று  இந்த நிலத்தை கையகப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது ஜிம்கான கிளப் தலைவர் குண்டன் இதற்கான ஆவணங்களை வனத்துறையிடம் ஒப்படைத்தார்     அ தேபோல் வனத்துறையினரும் ஆவணங்களை கிளப் நிர்வாகிகளிடம் கொடு த்தனர்.

நீலகிரி  வனக்கோட்ட வன அலுவலர் குருசாமி தபேலா, உதவி வனப்பாதுகாவலர் சரவணன்  தலைமையில் வனத்துறை அதிகாரிகள் பிங்கர்போஸ்ட் அருகேயுள்ள வென்லாக் டவுன்  பகுதியில் ஜிம்கானா கிளப் கட்டுப்பாட்டில் இருந்த 34.6 ஹெக்டர் நிலத்தை  கையகப்படுத்தினர். இந்த நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்து, வனத்துறைக்கு  சொந்தமான இடம் என அறிவிப்பு பலகைகளை வைத்தனர். கடந்த 100 ஆண்டுகளாக தனியார் வசம்  இருந்த நிலத்தை வனத்துறையினர் மீண்டும் கையகப்படுத்தியது சுற்றுச்சூழல்  ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அப்பகுதியில் கற்பூர மரங்கள் மற்றும்  சில அந்நிய தாவரங்கள் உள்ள நிலையில், அவைகளை அகற்றிவிட்டு சோலை தாவரங்களை  நடவு செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : land ,Gymkhana Club ,
× RELATED பொன்னேரி அருகே அரசு நிலம் மீட்பு