×

பெரம்பலூரில் கோரிக்கை விளக்க பிரசார இயக்கம்

பெரம்பலூர், நவ. 14: அரசு ஊழியர் நலன்களை பாதுகாக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான கோரிக்கை விளக்க பிரசார இயக்கம் கடந்த 11ம் தேதி நாகப்பட்டினத்தில் தொடங்கியது.சங்க மாநில தலைவர் ஞானத்தம்பி, மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமை யில் பிரசார இயக்கம் நேற்று பெரம்பலூர் வந்து சேர்ந்தது. பெரம்பலூர் பாலக்கரை, பழைய பேருந்து நிலையம், தாசில்தார் அலுவலகம், நான்கு சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குமரி சனந்தன், மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார், மாவட்ட இணை செயலாளர்கள் சுப்பிரமணியன், பால்பாண்டி பங்கேற்றனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு