முன்விரோத தகராறு பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

திருக்காட்டுப்பள்ளி, நவ. 14: பூதலூர் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பூதலூர் அடுத்த வெண்டயம்பட்டி குடியான தெருவை சேர்ந்த ரகுநாதன் மனைவி சகுந்தலா (55). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் இடப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரு குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜ்குமார், ஜெயக்குமார், தீபக் மற்றும் தினேஷ் ஆகியோர் சேர்ந்து சகுந்தலாவை தாக்கினர். இதில் படுகாயமடைந்த சகுந்தலா, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பூதலூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் சகுந்தலா புகார் செய்தார். அதன்பேரில் 4 பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் ரெத்தினசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

Related Stories:

>