×

பாண்டகப்பாடியில் மனுநீதி நாள் விழா 292 பேருக்கு ரூ.1.98 கோடியில் நலஉதவி

பெரம்பலூர், நவ. 14: வேப்பந்தட்டை தாலுகா பாண்டகப்பாடி கிராமத்தில் நடந்த மனுநீதி நிறைவு நாள் விழாவில் 292 பயனாளிகளுக்கு ரூ.1.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பாண்டகப்பாடி கிராமத்தில் மனுநீதி நாள் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 292 பயனாளிகளுக்கு ரூ1.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார். பெரம்பலூர் எம்எல்ஏ எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்...