112 பேருக்கு ரூ.8.29 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கும்பகோணம், நவ, 14: இன்னம்பூரில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 112 பேருக்கு ரூ.8.29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார். கும்பகோணம் அடுத்த இன்னம்பூரில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பல்வேறு துறைகளில் வழங்கப்பட்ட மனுக்களில் 112 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் இயற்கை தற்போது உதவி வருகிறது இதுவரை இல்லாத அளவுக்கு மேட்டூர் அணை இந்த பருவத்தில் நான்காவது முறையாக நிரம்பி உள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை இந்தாண்டு ரூ.1.05 ஆயிரம் எக்டேரில் சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தேவையான உரம் வழங்கப்பட்டு வருகிறது. எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் உரம் உள்ளிட்ட விவசாய பொருட்களை விவசாயிகளுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

தற்போது அனைவரும் வீடுகளை சுத்தமாக வைத்து கொண்டு டெங்கு கொசுவிடம் இருந்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியத்தில் 10 ஒன்றியத்தில் நிலத்தடி நீர் குறைந்து விட்டது. அதை சீர் செய்வதற்காக தற்போது நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் நேர்காணல் முகாம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்களும் துறை வாரியாக பிரித்து வழங்கப்பட்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். நேர்காணல் முகாமில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், நிலவள வங்கி தலைவர் அறிவழகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மகாலிங்கம், துணைத்தலைவர் சின்னையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தாசில்தார் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

* தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை இந்தாண்டு ரூ.1.05 ஆயிரம் எக்டேரில் சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தேவையான உரம் வழங்கப்பட்டு வருகிறது.

* எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் உரம் உள்ளிட்ட விவசாய பொருட்களை விவசாயிகளுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

Related Stories:

>