×

முந்திரி தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்குவதில்லை: நலச்சங்க கூட்டத்தில் புகார்

ஜெயங்கொண்டம், நவ.14: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தோழி பெண்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள் நலனுக்கான மற்றும் உரிமைகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு, தோழி கூட்டமைப்பைச் சேர்ந்த ரீடு செல்வம் தலைமை வகித்தார். ஜாக்குலின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பதிமராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழந்தைகள் நல ஆய்வாளர் குருநாதன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி, ஒன்றிய செயலாளர் அனுசுயா, குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,
அரியலூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு சிறுகுறு தொழிற்சாலைகளில் பணி புரிந்து வருகின்றனர். குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்களே அதிகம் பணிக்கு செல்கின்றனர்.
ஜெயங்கொண்டம், செந்துறை, உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட முந்திரி தொழிற்சாலைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகளில் 500 பெண்களும் அரியலூர் மாவட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் 600க்கும் மேற்பட்ட பெண்களும் பணிபுரிகின்றனர். இதுதவிர வளர் இளம் பெண்கள் அரியலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு போன்ற இடங்களில் நூற்பாலைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணி செய்து வருகின்றனர்.

Tags : cashew factories ,welfare meeting ,
× RELATED விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜ மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்