எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மின்கம்பம்

பாபநாசம், நவ. 14: பாபநாசம் அருகே சாலியமங்கலம் செல்லும் சாலையில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசத்தில் சாலியமங்கலம் செல்லும் சாலையோரம் பல மின்கம்பங்கள் உள்ளது. இதில் ஒரு மின்கம்பம் சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் அருகே செல்ல பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு வருகின்றனர். சாலியமங்கலம் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாபநாசம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

இந்த மின் கம்பமானது சாய்ந்தவாறு உள்ளது. 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் போலீஸ் நிழற்குடை அருகில் உள்ள மின் கம்பமானது எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக தினம்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும். எனவே சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>