×

தார்சாலை கோரி போராட்டம் அறிவிப்பு அமைதி பேச்சுவார்த்தை உடன்படாததால் வெளிநடப்பு

ஜெயங்கொண்டம், நவ.14:
ஜெயங்கொண்டம் அருகே தார்சாலை அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 15ம்தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதையொட்டி நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மக்கள் வெளிநடப்பு செய்தனர்.ஜெயங்கொண்டத்தில் இருந்து உட்கோட்டை வரை உள்ள 11 கிலோ மீட்டர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதை தார்சாலையாக செப்பனிட வேண்டும் என அனைத்து கட்சிகள் சேர்ந்து வரும் 15ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் உத்திராபதி தலைமையில் அறிவித்து இருந்தனர்.
இதனை முன்னிட்டு நேற்று மாலை அமைதிப் பேச்சுவார்த்தை ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ஜெயங்கொண்டம் தலைமையிடத்து துணை தாசில்தார் பாஸ்கர் தலைமை வகித்தார்.கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஏய் முண்டம் உட்கோட்டம் சேர்ந்த கண்காணிப்பாளர் நெப்போலியன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜா சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் உத்திராபதி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், உட்கோட்டை முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் இருந்து உட்கோட்டை சாலை கிராம சாலையை நபார்டு திட்டத்தில் ஒப்படைத்து உள்ளோம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். முறையான ஆவணங்களை நபார்டு திட்டத்தில் ஒப்படைத்தது எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கிராம நிர்வாகிகள தெரிவித்தனர்.
உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பேச வேண்டாம் என கூறி கூட்டத்தில் கலந்துகொண்ட உள்ளூர் மக்கள் மற்றும் நிர்வாகிகள் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாமல் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.நாங்கள் 15ம் தேதியன்று தார் சாலையில் ஏரோட்டி நாற்று நடும் போராட்டம் கண்டிப்பாக நடைபெறும் என கூறி வெளிநடப்பு செய்தனர்.

Tags : peace talks ,
× RELATED ஏஜென்டுகள் தான் போராட்டத்தை...