மைதான காம்பவுன்ட் சுவர் புதிதாக கட்டப்படுமா?

பாபநாசம், நவ. 14: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இடிந்து விழுந்த காம்பவுன்ட் சுவர் புதிதாக கட்டப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகில் வேகத்தடை அமைக்கப்படாமல் விளையாட்டு மைதானம் அருகில் வேகத்தடை அமைக்கப் பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும் இந்த சாலை மோசமான நிலையில் இருந்தாலும் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைப்பதற்காக இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டாலும் வாகனங்கள் வேகத்தை குறைத்து வேகத்தடை மீது ஏறி செல்வதை தவிர்ப்பதற்காக வேகத்தடையின் ஓரத்தின் வழியாக செல்கின்றனர். இதனால் வேகத் தடை அருகில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை சரியாக கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடும்.

எனவே விபத்தை தவிர்க்க வேகத்தடை அருகில் உள்ள பள்ளத்தை மூடுவதுடன் வாகன ஓட்டிகள் வேகத்தடை மீது ஏறி செல்லும் வகையில் அறிவுறுத்தல் பலகை வைக்க வேண்டும். இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்க வேண்டும். மேலும் இந்த சாலையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதேபோன்று விளையாட்டு மைதானத்தின் முன்பக்க காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து விட்டது. மாணவர்களின் நலன் கருதி இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவருக்கு பதிலாக தரமான புதிய முன்பக்க காம்பவுண்ட் சுவரை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: