×

தேவனூர் ஏரியில் கிராவல் மண் திருட்டு: பொக்லைன், டிராக்டர் சிறைபிடிப்பு: பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை

ஜெயங்கொண்டம், நவ. 14:
தேவனூர் ஏரியில் அனுமதியின்றி கிராவல் வெட்டி எடுப்பதை கண்டித்து பொக்லைன், டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கிராமத்துக்கு உட்பட்ட அத்து மினி ஏரி 12 ஏக்கர் அளவில் உள்ளது. இந்த ஏரியில் கடந்த 3 மாதமாக அனுமதியின்றி கிராவல் வெட்டி எடுக்கப்படுவதாக ஜெயங்கொண்டத்தில் தாசில்தார் மற்றும் ஆர்டிஓ ஆகியோருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஏரியில் சாலை ஓரமாகவே சுமார் 10 ஆழத்தில் கிராவல் வெட்டி எடுத்துள்ளனர்.இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்வோர் தவறி விழ நேரிடும் என பொதுமக்கள் அச்சப்பட்டனர். இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு இந்த ஏரிேய பிரதானமாக விளங்கி வருகிறது.

இந்த ஏரியில் வண்டல் மண் எடுத்தால் கூட பரவாயில்லை. ஆனால் 10 அடி ஆழத்துக்கு கிராவல் எடுக்கப்படுகிறது. கிராவல் எடுப்பதால் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. வண்டல் மண் எடுப்பதோடு நிறுத்தி இருந்தால் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் அதிகளவில் டிராக்டர்கள் கிராவல் ஏற்றி செல்வதால் தூங்க முடியவில்லை. எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு 8 மணி அளவில் கிராவல் ஏற்றி செல்லும் வாகனங்கள், பொக்லைன், டிராக்டர்களை சிறைபிடித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஜெயங்கொண்டம், நவ. 14:
தேவனூர் ஏரியில் அனுமதியின்றி கிராவல் வெட்டி எடுப்பதை கண்டித்து பொக்லைன், டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags : Devanur Lake ,public ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...