×

எஸ்பி அலுவலகத்தில் குழந்தைகள் தினவிழா

கரூர்,நவ.14: கரூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கரூர் சைல்டுலைன் 1098 டன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. கரூர் எஸ்பி பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். எஸ்பி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்14ம்தேதி குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் அவர்களது எதிர்கால நலன், நாட்டுநலன் உறுதி செய்திட இயலும்.அனைவரும் குழந்தைகளின் நலனுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதிஏற்போம்என்றார்.குழந்தைகளுடன் இணைந்து கேக்வெட்டி குழந்தைகள்தினம் கொண்டாடப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் காவல்துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.அரசு பணியாளர்களுக்கு சைல்டுலைன் 1098 உங்கள் நண்பன் என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் அணிவிக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மொத்தம் 295அழைப்புகள் குழந்தைகளின் இலவச தொலைபேசிஎண் 1098க்கு பதிவாகியுள்ளன. புகார்களின் அடிப்படையில் குழந்தைகளை மீட்டு அவர்களின் பாதுகாப்பினைஉறுதி செய்யப்பட்டுள்ளது. புகார்களுக்கு தீர்வு காண மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழுமம், மாவட்ட சமூக நலத்துறை, மாவட்டகாவல்துறை, இலவச சட்ட பணிகள் ஆணைக்குழு, கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மற்றும் இதர துறைகளுடன் இணைந்து குழந்தைகள் நலன்உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இக்கட்டான நிலையில் உள்ள குழந்தைகளுக்கு உதவிட 24மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா அவசர தொலைபேசி எண் 1098 அல்லது மேற்கண்டதுறைகளை தொடர்புகொள்ளலாம் என எஸ்பி தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் பாஸ்கரன், தம்பிதுரை, சைல்டுலைன் கூட்டு நிறுவனஇயக்குனர் சாமி, ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்ராஜா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்சுமதி, உள்ளிடடோர் கலந்துகொண்டனர்.

Tags : Children's Day ,SP Office ,
× RELATED தருமபுரம் மடத்தை ரவுடிகளிடம் இருந்து...