×

குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை செப்பனிட வேண்டும்

கரூர், நவ.14: தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை என்எச்7, மற்றும் தேசிய நெடுஞ்சாலை என்எச் 67 சாலைகள் உள்ளன. என்எச்7 காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக இச்சாலை திண்டுக்கல் மாவட்ட எல்லை வரை செல்கிறது.கரூர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அனைத்துவாகனங்களும் குலுங்கலுடன் சென்றுவருகின்றன. மேம்பாலத்தின்ஒவ்வொரு இணைப்பிலும் டயர்கள் ஏறும்போதுகனரக வாகனங்கள் குலுங்கியபடி செல்கின்றன, மேலும் பைபாஸ் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் செல்லும் அணுகுசாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. சேலத்தில் இருந்து வரும்வழியில் நாமக்கல் அருகேயும், கரூர் மாவட்டம் கணவாய் பகுதியிலும் சுங்கசாவடி அமைத்து சுங்கம் வசூலிக்கின்றனர். சுங்கம் வசூலிப்பு செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. மேலும் ஆங்காங்கே ரிப்ளக்டர் உடைந்து காணப்படுகிறது. புதிய ரிப்ளக்டர்களை அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அணுகுசாலையை செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED திருப்போரூர் அருகே பரபரப்பு...