×

வாக்காளர்கள் விவரங்களை சரிபார்க்க 18ம் தேதி கடைசி

பெரம்பலூர், நவ. 14: பெரம்ப லூர் மாவட்டத்தில் வாக்காளா–்கள் தங்களது விவரங்களை சரிபார்த்து கொள்ள வரும் 18ம் தேதி கடைசி நாளாகும்.
பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையம் 2020 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் மற்றும் தகுதியுள்ள நபர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கத்துடனும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, புகைப்படம், பிறந்த தேதி ஆகிய விவரங்களை வாக்காளர்களே திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு, வாகன ஓட்டுனர் உரிமம், ஆதார், ரேஷன் அட்டை, நிரந்தர கணக்கு எண், வங்கி கணக்கு புத்தகம், விவசாய அடையாள அட்டை மற்றும் சமீபத்தில் பெறப்பட்ட குடிநீர் இணைப்பு ரசீது, மின்கட்டண ரசீது, எரிவாயு இணைப்பு ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை ஆதாரமாக பதிவேற்றம் செய்து திருத்தம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்படி வரும் 18ம் தேதி வரை வாக்காளா–்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.சரிபார்ப்பு, திருத்தம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் வரைவு பட்டியலானது வரும் 25ம் தேதி தேதி வெளியிடப்படும். இந்த பட்டியலில் உள்ள திருத்தங்கள், ஆட்சேபனைகளை வரும் 25ம் தேதி முதல் டிசம்பா் 24ம் தேதிக்குள் வாக்காளர்கள் தெரிவிக்கலாம். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் திருத்தம் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலை பார்த்து திருத்தம் இருந்தால் திருத்தி சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : voters ,
× RELATED சென்னையில் நேற்று இரவு முதல் இன்று...