×

வெங்கமேடு விவிஜி நகர் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள தார்ச்சாலை பணி

கரூர், நவ. 14: கரூர் வெங்கமேடு விவிஜி நகர்ப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு விவிஜி நகர்ப்பகுதியையொட்டி அம்மன் நகர்ப்பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன.குண்டும் குழியுமாக இருந்த பகுதி சாலையை மேம்படுத்தும் வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொக்லைன் மூலம் சாலை அகற்றப்பட்டு, ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன.

அதன் பிறகு தொடர்ந்து தார்ச்சாலை அமைக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இதுநாள் வரை பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன.இதனால், இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இந்த சாலையில் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை விரைந்து தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், பணிகள் மேற்கொள்ளப்படாமல் தாமதம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, துறை அதிகாரிகள் அம்மன் நகர்ப்பகுதியில் நிலவும் பிரச்னையை கண்காணித்து, விரைந்து தார்ச்சாலை அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : VVG Nagar ,Venkamedu ,
× RELATED வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி 26ல் துவக்கம்