×

ஆபத்தான மின்கம்பத்தை விரைந்து அகற்ற வேண்டும்

கரூர், நவ. 14: கரூர் ராயனூர் செல்லாண்டிபாளையம் சாலையில் உருக்குலைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் இருந்து செல்லாண்டிபாளையம் பகுதிக்கு செல்லும் குறுகிய சாலை உள்ளது. இந்த சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்நிலையில், ராயனூர் குடியிருப்பு முடியும் பகுதியில் இந்த பகுதி குடியிருப்புகளுக்கு மின்சப்ளை வழங்கும் வகையில் அமைக்கப் பட்டிருந்த மின்கம்பம் மிகவும் உருக்குலைந்து மோசமான நிலையில் உள்ளது. விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தினால் பல்வேறு ஆபத்துக்கள் நேரிடும் வாய்ப்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை மாற்ற வேண்டும் என பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் மக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,
× RELATED கோயில் அகற்றம்