×

உள்ளாட்சி தேர்தலில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம்

கரூர், நவ. 14: உள்ளாட்சி தேர்தலில், திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம் என கரூர்மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, சொத்து பாதுகாப்பு குழுச் செயலாளர் கேசி பழனிசாமி, மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி, வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் மணிராஜ், நெசவாளர் அணிச் செயலாளர் பரணிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.திமுக தலைவருக்கு கழகத்தின் சட்டத் திட்டங்களை மாறறி அமைக்கவும், முடிவுகளை தீர்மானிக்கிற முழு அதிகாரத்தையும் வழங்கிய பொதுககுழுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது. பொதுக்குழுவில் கழகத்தின் அமைப்புகளை மாற்றி அமைத்து, 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் எனவும், ஊராட்சி செயலாளர் முறையை மாற்றியமைத்து ஊராட்சி கிளை செயலாளர்கள் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்து சட்டத் திருத்தம் செய்து, நிர்வாகிகள் பணியை பரவலாக்கிய தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது.நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய பாடுபடுவோம் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : DMK ,coalition candidates ,elections ,victory ,
× RELATED சட்டமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் வெற்றி கூட்டணி தொடரும்